1 முதல் 8ம் வகுப்பு வரையில் வீடுகளுக்கு வரும் மக்கள் பள்ளி - தமிழக அரசு புதுத்திட்டம்

1 முதல் 8ம் வகுப்பு வரையில் வீடுகளுக்கு வரும் மக்கள் பள்ளி - தமிழக அரசு புதுத்திட்டம்

1 முதல் 8ம் வகுப்பு வரையில் வீடுகளுக்கு வரும் மக்கள் பள்ளி - தமிழக அரசு புதுத்திட்டம்
Published on
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிக்கும் மக்கள் பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கற்றல் குறைப்பாடுகளை தீர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் 1 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் 'மக்கள் பள்ளி' என்கிறத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மக்கள் பள்ளித்திட்டம் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளது. எனவே கிராமசபை கூட்டத்தில் இது குறித்தும் விவாதிக்கவும், கல்வித்துறை அலுவலர்கள் கிராமசபை கூட்டங்களில் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com