இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தியில் எம்.பி.பி.எஸ்... பெருமிதம் தெரிவித்த அமித் ஷா!

இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தியில் எம்.பி.பி.எஸ்... பெருமிதம் தெரிவித்த அமித் ஷா!
இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தியில் எம்.பி.பி.எஸ்... பெருமிதம் தெரிவித்த அமித் ஷா!

“இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு கொண்டு வரப்பட்டிருப்பது, கல்வித்துறைக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக மத்தியபிரதேசத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார். 13 அரசு மருதுவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறியல், உடலியல், உயிர் வேதியியல் ஆகிய 3 பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இந்தியில் மருத்துவப்படிப்பு தொடங்கும் இன்றைய நாள் இந்திய கல்வித்துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். குழந்தைகள் தங்கள் சொந்த மொழியில் படிக்கும் வகையில், இந்திய மொழிகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தீர்மானத்தில் இது ஒரு முக்கியமான படியாகும்” என தெரிவித்துளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com