அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
Published on

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இணையவழியில் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. அதில் இதுவரை கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 4 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர் என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்தோரில் 2.94 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இதேபோல் பொறியியல் கல்லூரிகளில் சேர 2.7 லட்சம் பேர் தங்களை விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனராம். இவர்களில் 1.63 லட்சம் பேர் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.

இவற்றை தொடர்ந்து இவ்விரு கல்லூரிகளிலும் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் 29ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டா தேர்வு முடிவு வெளியாகும் வரை பிஆர்க் படிப்புகளுக்கு தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com