ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐடிபிஐ வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஒப்பந்த அடிப்படையிலான நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் வயது வரம்பு, கல்வித்தகுதி, மாதம் ஊதியம் உள்ளிட்ட தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியின் பல்வேறு கிளைகளிலும், அலுவலகங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
முதற்கட்டமான ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு நடைபெறும். ஓராண்டு பணி நிறைவு பெற்றவுடன் அடுத்தடுத்த ஆண்டுகளில் பணியின் தரத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். 3 ஆண்டுகள் நிறைவு பெறும் பட்சத்தில் வங்கியின் அசிஷ்டண்ட் மேனேஜர் பணிக்கு தகுதி பெறுவார்.
பணி மற்றும் விண்ணப்பிக்கும் விவரம்:-
- பணியின் பெயர்: நிர்வாக அதிகாரி
- காலியிடங்கள்: 760
- வயது வரம்பு: 20-25க்குள் இருக்க வேண்டும்(விதிகளின்படி வயதுவரம்பு சலுகை உண்டு)
- சம்பளம்: முதல் வருடம் ரூ.17,000, 2ம் வருடம் ரூ.18,500, 3ம் வருடம் ரூ.20,000
- கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்,
- (பொதுப்பிரிவுக்கு 60 சதவீதம், எஸ்.சி, எஸ்.டிக்கு 55 சதவீதம்)
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-02-2018
- தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு (90 நிமிடங்கள்)
- தேர்வு கட்டணம்: எஸ்.சி, எஸ்.டி ரூ.150/-, பொதுப்பிரிவு ரூ.700/-
- அறிவிப்பு: https://www.idbi.com/pdf/careers/FinalDetailedAdvertisementforpostofExecutive201805022018.pdf
- ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://ibps.sifyitest.com/idbirejan18/
- தேர்வு நாள்: ஏப்ரல் 28 (தற்காலிகமாக)