பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு: IBPS வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (கிளர்க்) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
IBPS Clerical Job
IBPS Clerical JobPT Web

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள க்ளெர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 6,000த்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் 665 காலி பணியிடங்கள் உள்ளன.

Notification
Notificationpt desk

ஜூலை 1 முதல் ஜூலை 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான முதல்நிலை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கியை தவிர்த்து நாட்டில் உள்ள இதர பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி , சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யுகோ வங்கி, பேங்க் ஆப் மகராஷ்டிரா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் நிரப்பி வருகிறது.

02.07.1996-க்கு முன்பு பிறந்தவர்களும் 01.07.2004-க்கு பிறகு பிறந்தவர்களும் இதில் விண்ணப்பிக்க முடியாது. 20 - 28 வயது என்பது வயது வரம்பு. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. ஆர்வம் உள்ளவர்கள் ரூ. 850 செலுத்தி விண்ணப்பிக்கலாம். பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், ரூ 175 கட்டி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி - https://www.ibps.in/index.php/clerical-cadre-xiv/

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com