\
“இந்து சமய அறநிலையத்துறை புதிதாக கல்லூரிகள் தொடங்கக் கூடாது”- சென்னை உயர் நீதிமன்றம்

“இந்து சமய அறநிலையத்துறை புதிதாக கல்லூரிகள் தொடங்கக் கூடாது”- சென்னை உயர் நீதிமன்றம்

“இந்து சமய அறநிலையத்துறை புதிதாக கல்லூரிகள் தொடங்கக் கூடாது”- சென்னை உயர் நீதிமன்றம்
Published on

இந்து சமய அறநிலைய துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் தொடங்கக் கூடாது என்றும், ஏற்கனவே தொடஞ்கிய  கல்லூரிகளின் செயல்பாடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கும் தகவலில், “அறங்காவலர் இல்லாமல், நீதிமன்ற அனுமதியின்றி கூடுதல் கல்லூரிகள் தொடங்க அறநிலையத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்ககூடாது. கல்லூரி தொடங்கிய ஒரு மாதத்துக்குள் இந்து மத வகுப்புகள் நடத்தாவிட்டால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது” எனக்கூறியுள்ளனர்.

மேலும் கோவில் நிதியில் கல்லூரி தொடங்க தடை கோரி டி.ஆர்.ரமேஷ் வழக்கில் அரசு பதிலளிக்க வேண்டுமென்று கூறி, விசாரணையை 5 வாரம் தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com