தமிழ்த் திரைப்பாடல்கள் மூலம் ஹிந்திப் பாடங்கள்: செங்கல்பட்டில் ஒரு புதுமை ஆசிரியர்

தமிழ்த் திரைப்பாடல்கள் மூலம் ஹிந்திப் பாடங்கள்: செங்கல்பட்டில் ஒரு புதுமை ஆசிரியர்
தமிழ்த் திரைப்பாடல்கள் மூலம் ஹிந்திப் பாடங்கள்: செங்கல்பட்டில் ஒரு  புதுமை ஆசிரியர்

செங்கல்பட்டு அருகிலுள்ள நெம்மேலியில் உள்ள கோகுலம் தனியார் பொதுப்பள்ளியில் ஹிந்தி ஆசிரியராகப் பணியாற்றுபவர் பிரபு. கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

பள்ளி மாணவர்கள் ஹிந்திப் பாடங்களை எளிமையாக புரிந்துகொள்வதற்கு புதுமையான திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார் ஆசிரியர் பிரபு. தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள பாடல் மெட்டுகளின் அடிப்படையில் அவர் ஹிந்திப் பாடல்களைப் பாடி பாடம் நடத்திவருகிறார்.

தமிழ்ப் பாடல்களின் மெட்டில் ஹிந்திப் பாடல்களைப் பாடி யூடியுப்பில் வீடியோவை பதிவேற்றம் செய்து, அதனை வாட்ஸ் ஆப் மூலம் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கிறார். அதை அப்படியே கவனித்துப் பாடும் மாணவர்கள் அதிக வரிகளைக் கொண்ட  பெரிய பாடல்களையும் மனப்பாடம் செய்துவிடுகிறார்கள்.

உனக்கென்ன வேண்டும் சொல்லு, இதுவரை இல்லாத உணர்விது உள்ளிட தமிழ் சினிமா பாடல்கள் மற்றும் தெலுங்கில் பிரபலமான இன்கேம்... இன்கேம்... காவலா போன்ற பாடல்களின் மெட்டுகளிலும் ஹிந்திப் பாடல்களைப் பாடியுள்ளார் பிரபு. தற்போது அவருடைய புதிய பாணியிலான பாடங்களுக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆசிரியர் பிரபு 

பள்ளியில் 4,5,7 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு புதிய பாணியில் ஹிந்திப் பாடங்களைக் கற்பித்துவருகிறார். அதேபோல பொது அறிவு தொடர்பான பாடங்களை நடத்திவரும் அவர், சிறந்த பதில்களை அளிக்கும் மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கிவருகிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com