கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - உயர்கல்வித்துறை

கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - உயர்கல்வித்துறை
கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - உயர்கல்வித்துறை

அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆப்லைன் வழியே மட்டுமே நடைபெறும் என உயர் கல்வித் துறைச் செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். 

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படவேண்டும் என மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இனி செமஸ்டர் தேர்வுகள் ஆஃப்லைன் வழியே மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்துவகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com