ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
Published on

தமிழகத்தில் ஆன்லைனில் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “ஊரடங்கு காலத்தில் பல பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த துவங்கி விட்டன. வசதி படைத்தவர்களிடம் 'ஸ்மார்ட் போன்' இருக்கும். இணையதள இணைப்பும் இருக்கும். அவர்களால் எளிதாக பின்பற்ற முடியும். ஆன்லைனில் படிக்கும் மாணவர்களை தவறான வழிக்கு அழைத்து செல்லும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் வகுப்புகளில் இருந்து விலகி தேவையில்லாத விஷயங்களை இணையதளங்களில் பார்க்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இந்த தொழில்நுட்பத்தை நேர்மையுடன் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். இணையதளத்தில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதால் பலர் திசைமாறி விடுகின்றனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். வகுப்பறைகளில் பின்பற்றக்கூடிய ஒழுக்கம், கண்ணியம் சூழ்நிலை ஆன்லைனில் கிடைக்காது. ஆசிரியர் மாணவர்களுக்கு இடையில் கருத்து பரிமாற்றங்கள் இருக்க வேண்டும். கற்றலில் அது முக்கியம்.

ஆன்லைனில் பாடம் நடத்துவது ஆசிரியர்களுக்கும் சிரமம். ஆசிரியர்கள் பலர் ஆன்லைன் சூழ்நிலைக்கு பழகியிருக்க மாட்டார்கள். டிஜிட்டல் முறையில் பாடங்கள் நடத்துவதால் நகர்ப்புற - கிராமப்புற மாணவர்கள் இடையே சமச்சீரற்ற நிலை ஏற்படுகிறது.எனவே முறையான திட்டங்கள் வழிமுறைகளை ஏற்படுத்தாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு சார்பில் பிரத்யேக கல்வி சேனல் ஒளிபரப்பப்படுவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதைக்கேட்ட உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், பாதுகாப்பான ஆன்லைன் கல்விக்கு என்ன விதிமுறைகள் உள்ளன என பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com