கல்வி
மதிப்பெண் கணக்கீடு முறையில் தலையிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
மதிப்பெண் கணக்கீடு முறையில் தலையிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கு பதில் திருப்புதல்(Revision) தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்க வேண்டும் என 8 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் நலன் கருதி அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.