பல் மருத்துவத்துக்கான இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது - மருத்துவச் செயலாளர்

பல் மருத்துவத்துக்கான இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது - மருத்துவச் செயலாளர்

பல் மருத்துவத்துக்கான இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது - மருத்துவச் செயலாளர்
Published on

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், பல் மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முதல் பத்து இடங்களை பிடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ், பல் மருத்துவ இடங்கள் 107ஆக அதிகரித்துள்ளதாகக் கூறினார். கடந்த ஆண்டை விட ஆயிரத்து 570 மருத்துவ இடங்கள் இந்த ஆண்டு கூடுதலாக கிடைத்துள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தவறுதலாக பொதுப்பிரிவில் விண்ணப்பித்த தகுதிவாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 152பேர், மீண்டும் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டதாகக் கூறினார். 11 அல்லது 12ஆம் தேதி முதல் சுற்று மருத்துவ கலந்தாய்வு நிறைவடையும் எனவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com