\
விலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்

விலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்

விலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆர். சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் செயல்படும் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 17 தொழிற்பிரிவுகளில் 8 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை அக்டோபர் 23 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் நேரடியாக அக்டோபர் 31 ஆம் தேதி வரை பயிற்சியில் சேரலாம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, பாடப்புத்தகம், சீருடை, வரைபடக் கருவிகள், மாதாந்திர உதவித்தொகை ரூ. 500 என பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

விவரங்களுக்கு: 044 22501350, 22501982, 9499055651, 9499055649

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com