பள்ளியில் பாலியல் தொல்லை பாதிப்புகளை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் - உச்சநீதிமன்றம்

பள்ளியில் பாலியல் தொல்லை பாதிப்புகளை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் - உச்சநீதிமன்றம்
பள்ளியில் பாலியல் தொல்லை பாதிப்புகளை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் - உச்சநீதிமன்றம்

பள்ளி குழந்தைகள், மாணவ-மாணவியர்கள் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது

கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவிகளுக்கு என தனிப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.



இந்த மனுவில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க விசாகா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கமிட்டிகள் இருக்கின்றது ஆனால் கல்வி நிலையங்களில் போக்சோ சட்டம் மட்டுமே இருக்கின்றது .

இதிலும் ஒரு குற்றம் நிகழ்ந்து அதற்குப்பிறகு குற்றவாளிகளை தண்டிப்பதற்காக வழிமுறைகள் தான் இருக்கிறதே தவிர குற்றம் நடைபெறாமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகள் எதுவுமில்லை எனவே நாடு முழுவதும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.



அப்போது கல்வி நிலையங்களில் மாணவ மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவது தொடர்பாக கவலை தெரிவித்த நீதிபதிகள் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட வேண்டும் எனவும், பள்ளிக் குழந்தைகள், மாணவ மாணவிகள் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என  கருத்து தெரிவித்தார்.  மேலும், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை  தடுக்க "விகாஸா" வழிமுறைகள் இருப்பது போல பள்ளிக் கூடங்களிலும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com