’ரிவெர்ஸ் கேமரா நிச்சயம் வேண்டும்’-பள்ளி வாகனங்கள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

’ரிவெர்ஸ் கேமரா நிச்சயம் வேண்டும்’-பள்ளி வாகனங்கள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்
’ரிவெர்ஸ் கேமரா நிச்சயம் வேண்டும்’-பள்ளி வாகனங்கள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

பள்ளிகளில் கடந்த காலங்களில் நடந்த விபத்துக்கள், அந்த விபத்துகளில் இருந்து கற்ற படிப்பினைகள் மூலம் சில வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறது. பள்ளி மாணவர்களை வேனில் அழைத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விபத்தில் 2ஆம் வகுப்பு மாணவன் உயரிழந்தது அனைவரது மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்து குறித்த விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பள்ளி மாணவர்களை வேனில் அழைத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பள்ளிகளில் கடந்த காலங்களில் நடந்த விபத்துக்கள், அந்த விபத்துகளில் இருந்து கற்ற படிப்பினைகள் மூலம் சில வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறது. அதேபோல் போக்குவரத்து துறையும் பல்வேறு வழிகாட்டுதலைகளை கொடுத்துள்ளது. பள்ளிகளில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கும், வாகனங்களை இயக்கும் அனுமதி கொடுக்கும்போது,

  • குறிப்பாக வாகனங்களில் கதவு இருக்க வேண்டும்
  • குழந்தைகள் வெளியே கை மற்றும் தலையை நீட்டாமல் இருப்பதற்கு கம்பிகள் பொருத்தி இருக்க வேண்டும்
  • வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்தியிருக்க வேண்டும்
  • ரிவெர்ஸ் கேமரா கண்டிப்பாக பொறுத்தியிருக்க வேண்டும்
  • வாகனத்தில் ஓட்டுநரை போலவே நடத்துனர் இருக்க வேண்டும். மாணவர்கள் ஏறும்போதும் இறங்கும்போதும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது நடத்துநரின் கடமை என அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளன.

இவை சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்க பள்ளி அளவிலும் அரசுத்துறை அளவிலும் கண்காணிப்பு குழுக்கள் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவிக்கிறது. இதெல்லாம் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிபடுத்த வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

அதேபோல் பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லும் வாகனங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. பள்ளிகளின் சொந்த வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பள்ளிகள் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் பெற்றோர்கள் தாங்களே ஏற்பாடு செய்துக்கொள்ள கூடிய வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் என எதுவாக இருந்தாலும் பள்ளி நிர்வாகமே அந்த வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

2012இல் பல்லாவரம் தனியார் பள்ளி மாணவி ஸ்ருதி பள்ளி வேனில் இருந்து ஓட்டையில் வழியாக விழுந்த விபத்தில் உயிரிழந்தார். 2022இல் பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவ தீக்‌ஷித் மீது வேன் மோதி உயிரிழந்துள்ளான். ஸ்ருதி மறைந்தபோது தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போதும் அதேபோன்ற நடவடிக்கையை அரசு மேற்கொள்ள தான் போகிறது. இந்த நடவடிக்கைகள் கண்துடைப்பாக இல்லாமல் கடமையுணர்ச்சியுடன் இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுக்க முடியும் என்பதே நிதர்சனம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com