குரூப் 4 தேர்வு : தேர்ச்சி பெற்ற 39 பேரின் புதிய பட்டியல் வெளியீடு

குரூப் 4 தேர்வு : தேர்ச்சி பெற்ற 39 பேரின் புதிய பட்டியல் வெளியீடு

குரூப் 4 தேர்வு : தேர்ச்சி பெற்ற 39 பேரின் புதிய பட்டியல் வெளியீடு
Published on

குரூப் 4 தேர்வு முறைகேடு புகாருடன் தொடர்புடையதாக கருதப்படும் 39 பேருக்கு பதிலாக புதிய தேர்ச்சிப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, டிஎன்பிஎஸ்சி ஊழியர், பிற துறைகளைச் சேர்ந்தவர், இடைத் தரகர்கள், முறைகேடாக தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரை பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்புடைய 39 பேருக்கு பதிலாக புதிய தேர்ச்சிப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்காக நாளை முதல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி வரை சான்றிதழ்களை இணையதள வழியாக பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com