குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் எப்போது? இன்று வெளியாகிறது அறிவிப்பு?

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் எப்போது? இன்று வெளியாகிறது அறிவிப்பு?
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் எப்போது? இன்று வெளியாகிறது அறிவிப்பு?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு எப்போது என்பது பற்றி இன்று அறிவிப்பு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டத்தை கடந்த நவம்பரில் வெளியிட்டிருந்தார் அதன் தலைவர் பாலச்சந்திரன். அந்த வருடாந்திர திட்டத்தில் பிப்ரவரியில் குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று பகல் 12.30 மணிக்கு குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை செய்தியாளர் சந்திப்பு நடத்தி வெளியிடுகிறார் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன்.

இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படி பார்க்கையில், இன்றிலிருந்து 75 நாள்கள் என்ற கணக்கில் வரும் மே மாதத்தில் தேர்வு நடக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com