ஜனவரி 3ம் தேதி குரூப் 1 முதல் நிலைத்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஜனவரி 3ம் தேதி குரூப் 1 முதல் நிலைத்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஜனவரி 3ம் தேதி குரூப் 1 முதல் நிலைத்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழகத்தில் நடத்தப்படும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3 ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரலில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று காரணமாக தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிஎன்பிஸ்சி வெளியிட்ட செய்தியில், குரூப் 1 பிரிவில் காலியாகவுள்ள 69 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி நடைபெறும். மேலும், தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் காலிப் பணியிடங்களுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com