\
``புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு இதுவே உகந்த தருணம்"- ஆளுநர் ஆர்.என்.ரவி

``புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு இதுவே உகந்த தருணம்"- ஆளுநர் ஆர்.என்.ரவி

``புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு இதுவே உகந்த தருணம்"- ஆளுநர் ஆர்.என்.ரவி
Published on

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு இதுவே உகந்த தருணம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை மண்டலத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளி முதல்வர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச்சந்திப்பின் போது புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “புதிய கல்விக்கொள்கை மூலம் அறிவுத் தலைநகரமாக தேசம் வளர்ச்சியடையும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு இதுவே உகந்த தருணம். கல்வி மற்றும் விளையாட்டு சார்ந்த விஷயங்களில் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என கூறி, பள்ளி முதல்வர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com