அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு இணையதளம் மூலம் அக்டோபர் 12 முதல் 14 ஆம் தேதி வரை புதிதாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கலந்தாய்வு வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இதுபற்றி அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தில் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்துகொள்ளலாம். மாணவ மாணவிகள் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான வாய்ப்பைப் பயன்படுத்தி தொழிற் பயிற்சி நிலையங்கள் சேர்ந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.skilltraining.in.gov.in
விவரங்களுக்கு: 044 26252453

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com