லட்சக்கணக்கில் சம்பளம்; செலவே இல்லாமல் அனிமேஷன் படிக்கலாம் பாஸ்!

லட்சக்கணக்கில் சம்பளம்; செலவே இல்லாமல் அனிமேஷன் படிக்கலாம் பாஸ்!

லட்சக்கணக்கில் சம்பளம்; செலவே இல்லாமல் அனிமேஷன் படிக்கலாம் பாஸ்!
Published on

அதிக செலவு இல்லை. மன அழுத்தம் தருவதில்லை. விருப்பமான வேலையை செய்தால் போதும். அதுதான் படிப்பு. அதுதான் பரீட்சை. அப்படியொரு கல்லூரி இருப்பது தெரியுமா உங்களுக்கு? 165 ஆண்டுகள் பழமையானது, இந்தக் கல்லூரி. விக்டோரியா மகாராணி ஆரம்பித்து வைத்த அழகான கல்லூரி. தமிழக அரசின் கவின்கலைக் கல்லூரி. மெரீனாவில் முஷ்டியை முறுக்கிக்கொண்டிருக்கும் நிற்கும் உழைப்பாளர் சிலையை, யார் செய்தார்கள் தெரியுமா? இந்தக் கல்லூரியின் முதல் முதல்வர், ராய் செளத்ரிதான். இந்தியாவிலேயே கவின்கலைக்காகத் தொடங்கப்பட்ட இதில் என்ன படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? என்ன வேலை கிடைக்கும்? 

“மொத்தம் ஆறு துறைகள் இங்க இருக்கு. ஒவ்வொரு படிப்பும் தனித்தனியே நான்கு வருஷங்கள் படிக்க வேண்டும். செராமிக் டிசைனிங், டெக்ஸ்டைல் பிரின்ட் மேக்கிங், விஷூவல் கம்யூனிகேஷன், சிற்பக்கலை, பிரின்ட் மேக்கிங், பெயின்டிங். இதில் என்ன விருப்பமோ அதில் சேர்ந்து படிக்கலாம். இந்தக் கல்லூரியில் வருடத்திற்கு 90 ’சீட்’ மட்டுமே கொடுக்கிறோம். வெளிமாநில மாணவர்களுக்குத் தனியாக 20 சீட் தருகிறோம். ஆக மொத்தம் 110 சீட்ஸ். ஆனால் எங்களுக்கு 500 விண்ணப்பங்களுக்கு மேல் வருகின்றன. அதில் முறையாக தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. இங்க படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நன்றாக படம் வரையத் தெரிய வேண்டும். ஓவியத்தில் ஈடுபாடு இருக்க வேண்டும். அடிப்படை கல்வித் தகுதி, ப்ளஸ் டூ” என்கிறார் முதல்வர்.

இன்ஜினீயரிங் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்தில் இப்படிப்பு மீதான ஆர்வம் குறைவாக இருந்திருக்கிறது. இன்ஜினீயரிங் துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் இந்தக் காலத்தில் மீண்டும் ‘கவின் கலை’ படிப்பின் மீது விருப்பம் அதிகரித்திருக்கிறது. இந்தப் படிப்பை முடித்தால் ஹோட்டல் இன்டிரியர் டிசைனர், டெக்ஸ்டைல் துறை டிசைனர், பர்னிச்சர் துறைகளில் டிசைனர், ஜூவல்லரி டிசைனர், ஆர்ட் டைரக்‌ஷன் போன்ற பல வகைகளில் வாய்ப்புகள் பெருகிக் கிடக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் ஆரம்பத்திலேயே 30 ஆயிரம் முதல் லட்சக் கணக்கில் ஊதியம் பெற உத்திரவாதம் உள்ளது என்பதால், மாணவர்களின் மனம் இந்தக் கல்லூரி பக்கம் திரும்பியுள்ளது. 

இவை போக இக்கல்லூரியில் உள்ள விஷுவல் கம்யூனிகேஷன் பாடத்திட்டங்களைதான் பல கல்லூரிகள் கடன் பெற்று தங்கள் கல்லூரிகளில் பாட திட்டமாகப் பயன்படுத்தி வருகின்றன. இங்கு இதுவரை ஓவியர்கள், டிசைனர்கள், ஃபோட்டோகிராஃபி, அனிமேஷன் என 20 ஆயிரத்திற்கு மேலான மாணவர்கள் படித்துவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். நடிகர் சிவகுமார், இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட பலர் இங்கு படித்தவர்கள்தான்.

“தாழ்த்தப்பட்ட மாணவராக இருந்தால் வருஷம் 500 ரூபாய் கட்டினால் போதும். வயது வரம்பு 26. மற்ற சாதியினர் என்றால் வருஷம் 2000 ரூபாய். வயது வரம்பு 23. இதிலேயே நாங்கள் படம் வரைந்து பழகுவதற்காக உபகரணங்கள் மட்டுமே 1000ரூபாய்க்கு இலவசமாக தருகிறோம். ஸ்காலர்ஷிப் வருடத்திற்கு 5000 ரூபாய் அரசு தருகிறது. இந்தியா முழுக்க சுற்றி பார்க்க வேண்டிய வசதி வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறோம்” என இன்ப அதிர்ச்சிக் கொடுக்கிறார் முதல்வர். சென்னையை போலவே கும்பகோணத்திலும் ஒரு கவின் கலைக் கல்லூரி உள்ளது. 


அது எப்படி?

“இங்க மொத்தம் 65 சீட். வண்ணக்கலை பிரிவு, விஷ்காம், சிற்பக்கலை என மூன்று படிப்புகள் இருக்கு. அதோடு போட்டோகிராஃபி, டெக்ஸ்டைல் டிசைன், பிரின்டிங் டிசைன் சேர்த்து சொல்லி தருகிறோம். BFA, MFA இரண்டும் இருக்கு. இளங்கலை நான்கு வருடம். முதுகலை இரண்டு வருடம். இது தனி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது.  மெடிக்கல் படிப்பதற்கான சீட் கிடைத்தும் வேண்டாம் என மறுத்திவிட்டு இங்க படிக்க வருகிறார்கள். கடந்த இரண்டு வருஷமாக கவின்கலை படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித் துள்ளது”என்கிறார், 100 வருடம் பழமையான இந்தக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மனோகர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com