10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - புதிய அட்டவணை வெளியீடு
10 ஆம் வகுப்பு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்திற்கான திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியிட்டிருந்தது. இதனிடையே 10ஆம் வகுப்பு தேர்வுகளில் இனி மொழிப்பாடங்களின் இரண்டு தாள்களை இணைக்கப்பட்டு ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்துக்கான திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையை அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27 ஆம் தேதி மொழிப்பாடம், 28 ஆம் தேதி விருப்ப பாடம், மார்ச் 31 ஆம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 3 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். ஏப்ரல் 7 ஆம் தேதி அறிவியல், ஏப்ரல் 13 ஆம் தேதி கணிதத்தேர்வு நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.