தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அரசு தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அரசு தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அரசு தகவல்
Published on

தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 -2021 கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். தமிழகத்தில் பள்ளிச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 கோடியாக உள்ளது. 12-ஆம் வகுப்பில் மட்டுமே 10 லட்சம் பேர் உள்ளனர். மற்ற வகுப்புகளில் உள்ள மாணவர்கள் கடந்த ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாத காரணத்தால் பெற்றோர்கள் அவர்ளுடைய எதிர்காலம் குறித்த பயத்தில் இருக்கின்றனர்.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருப்பதால் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின், பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.  மேலும், பள்ளிகள் திறந்தவுடன் இலவச பாடப்புத்தகங்கள், இதர நலத்திட்டங்கள் வழங்குவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார். இந்த கல்வியாண்டிலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை அனைவருமே ஆல் பாஸ் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com