மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்: 361 பேருக்கு அழைப்பு

மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்: 361 பேருக்கு அழைப்பு
மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்: 361 பேருக்கு அழைப்பு

பொதுப் பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு வரும் டிசம்பர் 4-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

நீட் தேர்வில் 710 முதல் 631 வரை மதிப்பெண்கள் எடுத்த 361 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 747 இடங்கள் உள்ளன. இதில் பொதுப்பிரிவில் மட்டும் 864 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 14 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கு 329 இடங்கள் இருக்கின்றன.

இரு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 151 இடங்களில், 64 இடங்கள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 18 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 985 இடங்களில் பொதுப் பிரிவினருக்கு 305 இடங்கள் வழங்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பு படிப்பதற்கான இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com