பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதிகள்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பின் முழு விவரம்!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதிகள்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பின் முழு விவரம்!
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதிகள்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பின் முழு விவரம்!

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 தொடங்கி அக்டோபர் 18 வரை நடைபெற உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கலை அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 25 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் கலந்தாய்வு மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மாணவ சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள் தனியார் கல்லூரி பிரதிநிதிகள் அரசுக் கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த உடன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, 2022 -23 பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிட்டார். அதன்படி நமக்கு தெரியவரும் தேதி விவரங்கள்:

விண்ணப்பம் விநியோகம் தொடங்கும் நாள் - 20-06-2022

விண்ணப்பிக்க கடைசி நாள் / படிவங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் - 19-07-2022

ரேண்டம் எண் வெளியீடு - 22-07-2022

சான்றிதழ் சரிபார்ப்பு (TFC) - 20-07-2022 to 31-07-2022

தரவரிசை பட்டியல் - 08-08-2022

சிறப்பு கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர் குடும்பத்தினருக்கான இடஒதுக்கீடு கலந்தாய்வு) - 16-08-2022 to 18-08-2022

பொது கலந்தாய்வு - 22-08-2022 to 14-10-2022

ஆன்லைன் கலந்தாய்வு - 15-10-2022 to 16-10-2022

SC மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 17-10-2022 to 18-10-2022

இந்த அட்டவணையின்படி, அக்டோபர் 18 முதல் பொறியியல் கலந்தாய்வு முடிவடைகிறது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட பின் அமைச்சர் பேசுகையில், “முதல் வாரத்திற்குள் 15,000 பேருக்கு கலந்தாய்வு நடைபெறும். காலி இடங்கள் கண்டறிவது சிரமமாக உள்ளது. இதனால் பாடத்திட்டம் தொடங்க தாமதம் ஆகிறது. எனவே முதல் வாரத்திற்குள் 15 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு நடைபெறும். இரண்டு மாதத்தில் கலந்தாய்வு நடைபெற்று முடிவுகள் வெளிவரும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். இந்த வருடம் சென்றாண்டு வசூலித்த கட்டணம் தான் வசூலிக்கப்படும்.

கொரோனா காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் உள்ளது. கலந்தாய்வு முடிந்து 7 நாட்களுக்குள் முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தவுடன், (23ம் தேதி வெளிவரும்) 27-6-22 முதல் விண்ணப்பம் தொடக்கம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி 15-07-2022. கல்லூரிகளில் 25 ஜூலை முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com