\
+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 10-ம் தேதி முதல் விநியோகம்

+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 10-ம் தேதி முதல் விநியோகம்

+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 10-ம் தேதி முதல் விநியோகம்
Published on: 

12-ஆம் ‌வகுப்பு மாணவர்களுக்கு வரும் 10-ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி, கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள் அவரவர்கள் பயின்ற பள்ளிகளில் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவரவர் தேர்வெழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இணையத்தில் பதிவிறக்கம் செய்த மதிப்பெண் சான்றிதழையே மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com