கல்வி
84 வயதில் 10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சியடைந்த ஹரியானா முன்னாள் முதல்வர்
84 வயதில் 10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சியடைந்த ஹரியானா முன்னாள் முதல்வர்
ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 84 வயதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஹரியானாவில் 4 முறை முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, கடந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். அதில், 10 ஆம் வகுப்பில் ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி அடையாத நிலையில், அவருடைய 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவை மாநில தேர்வு வாரியம் நிறுத்தி வைத்தது. இதனையடுத்து 10ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வை எழுதினார். இந்த நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், அவர் தலைநகர் சண்டிகரில் உள்ள தேர்வு மையத்திற்குச் சென்று தனது பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொண்டார். ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.