இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில் வேலை!

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில் வேலை!

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில் வேலை!
Published on

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில், டெக்னிக்கல் ஆபிசர் உள்ளிட்ட 13 பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணிகள்:
1. அசிஸ்டெண்ட் டைரக்டர்
2. தொழில்நுட்ப அதிகாரி
3. மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி
4. உதவியாளர் 
5. பர்சனல் அசிஸ்டெண்ட்
6. துணை இயக்குனர் உள்ளிட்ட 13 பணிகள் இதில் அடங்கும்.

காலிப்பணியிடங்கள்:
1. அசிஸ்டெண்ட் டைரக்டர் - 05
2. தொழில்நுட்ப அதிகாரி - 130
3. மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி - 37
4. உதவியாளர் - 34
5. பர்சனல் அசிஸ்டெண்ட் - 25
6. துணை இயக்குனர் - 06

மொத்தம் = 275 காலிப்பணியிடங்கள் 

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 25.04.2019

வயது வரம்பு:
அதிகபட்ச வயது 35 ஆகவும், ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பில் மாற்றங்கள் உள்ளன. வயது வரம்பில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு தளர்வும் உண்டு.

தேர்வுக்கட்டணம்:
பொது / EWS / OBC - ரூ.1,000
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / முன்னாள் ராணுவத்தினர் / PwBD - ரூ.250

குறிப்பு:
தேர்வுக்கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.
செலுத்திய தேர்வுக்கட்டணத்தை மீண்டும் திரும்ப பெற இயலாது.

தேர்வு முறை:
1. கணினி வழித்தேர்வு
2. எழுத்துத் தேர்வு
3. நேர்முகத் தேர்வு

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, (B.A / B.Sc / B.E / B.Tech / Law / MBA / MCA) போன்ற ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பையோ அல்லது பட்டயப்படிப்பையோ, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதியில் மாற்றங்கள் உண்டு. பிளஸ்-டூ படித்தவர்களுக்கும் சில பணிகளுண்டு.
 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/60149//Instruction.html - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த பல்வேறு தகவல்களுக்கு, https://www.fssai.gov.in/home/career.html - என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com