மீண்டும் கசிந்தது வினாத்தாள்: +2 திருப்புதல் தேர்வுக்கான வணிகக் கணித வினாத்தாளும் கசிவு

மீண்டும் கசிந்தது வினாத்தாள்: +2 திருப்புதல் தேர்வுக்கான வணிகக் கணித வினாத்தாளும் கசிவு
மீண்டும் கசிந்தது வினாத்தாள்: +2 திருப்புதல் தேர்வுக்கான வணிகக் கணித வினாத்தாளும் கசிவு

12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கணிதம், வணிகவியல், உயிரியல் வினாத்தாளைத் தொடர்ந்து வணிக கணித வினாத்தாளும் முன்கூட்டி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில், 10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான வினாத்தாளும், 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான வினாத்தாளும் திருவண்ணாமலையில் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் பரவின. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன் குமார், அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பித்தார்.

இதனிடையே 12ஆம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கான வினாத்தாளும், உயிரியல் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் வந்தவாசியில் உள்ள தனியார் பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அட்டவணைப்படி திருப்புதல் தேர்வு மாற்றமின்றி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், வணிக கணித பாட வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிக்க: தேர்தல் பரிசா? சரக்கு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ஹாட் பாக்ஸ்கள்'

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com