கல்வி
அதிகாலை 3 மணி வரை நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வு
அதிகாலை 3 மணி வரை நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வு
எதிர்பார்த்ததை விட அதிக மாணவர்கள் வந்ததால் பொறியியல் படிப்புக்கான துணைக் கலந்தாய்வு இன்று அதிகாலை 3.30 மணி வரை நடைபெற்றது.
முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து துணைக்கலந்தாய்வு ஜூலை 28 முதல் 30ஆம் தேதி வரை சென்னை தரமணியில் நடந்தது. இறுதி நாளில் 2 ஆயிரம் மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 ஆயிரம் பேர் வந்ததால் நேற்று மாலை 5 மணிக்கு நிறைவடைய வேண்டிய கலந்தாய்வு நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது. இந்தக் கலந்தாய்வு இன்று அதிகாலை மூன்று முப்பது மணி வரை நடைபெற்றது.
சரியான திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம் என கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.