காலியாக உள்ள மருத்துவப் படிப்பு இடங்களுக்கு இன்று முதல் இறுதிக்கட்ட கலந்தாய்வு

காலியாக உள்ள மருத்துவப் படிப்பு இடங்களுக்கு இன்று முதல் இறுதிக்கட்ட கலந்தாய்வு
காலியாக உள்ள மருத்துவப் படிப்பு இடங்களுக்கு இன்று முதல் இறுதிக்கட்ட கலந்தாய்வு

அரசு சுயநிதி கல்லூரிகளில் காலியாக இருக்கும் 597 மருத்துவப் படிப்பு இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் தேதி தொடங்கியது. முதலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நடத்தப்பட்டு தொடர்ந்து பல்வேறு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.


இரண்டுகட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் கோர்ட் அளித்த உத்தரவின்படி காலியாக இருக்கும் 138 எம்பிபிஎஸ், 459 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 597 இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களுக்கு இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் (திங்கள்) கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அரசு மற்றும் சுயநிதி பல்மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களுக்கும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களுக்கும் இன்று கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com