பொறியியல் படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்..!

பொறியியல் படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்..!
பொறியியல் படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்..!

பொறியியல் படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகாது என தற்போது கூறப்பட்டுள்ளது. அதற்குப் பதில் வரும் 20-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில், அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 25-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com