பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது. 583 கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 67 ஆயிரம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தொழிற்கல்வி மாணவர்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, ஜூலை 21-ம் தேதி விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை.23-ம் தேதி தொடங்குகிறது.
கலந்தாய்வு தொடர்பான தகவல்களை www.tnea.ac.in என்ற வலைத்தளத்தில் அறியலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.