\
17ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு.... 2018 முதல் ஆன்லைன் கலந்தாய்வு

17ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு.... 2018 முதல் ஆன்லைன் கலந்தாய்வு

17ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு.... 2018 முதல் ஆன்லைன் கலந்தாய்வு
Published on

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு வரும் 17 ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமைச் செயலக வளாகத்தில், அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கலந்தாய்வு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வரும் 17-ம் தேதி பி இ கலந்தாய்வு தொடங்குகிறது. 17, 18ம் ஆம் தேதிகளில் தொழில் கல்வி பிரிவு கலந்தாய்வும் 19 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும் ஜூலை 21ல் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறும். 
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறினார். மேலும், அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com