இந்தக் கல்வியாண்டின் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
இன்று தொடங்கும் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வர நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முதல் நாளான இன்று தொழிற்படிப்பு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதற்காக ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 77 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தக் கல்வியாண்டில் தொழிற்பிரிவு மாணவர்களுக்கு 6 ஆயிரத்து 224 இடங்களும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 419 இடங்களும் உள்ளன. இந்த நிகழ்வில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், முதல் 11 மாணவர்களுக்கு ஒதுக்கீடு ஆணையை வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர், காலை 7 மணி மற்றும் மாலை 7 மணிக்கு மேல் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவிகளுக்கு தங்கும் வசதி செய்யப்பபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.