மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்... இளைஞர்களின் எதிர்காலம் என்ன?

மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்... இளைஞர்களின் எதிர்காலம் என்ன?
மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்... இளைஞர்களின் எதிர்காலம் என்ன?

தமிழகத்தில் 88 பொறியியல் கல்லூரிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை இல்லை, இதனால் மூடப்படும் சூழலில் பொறியியல் கல்லூரிகள்..இளைஞர்களின் எதிர்காலம் என்ன என்பது பற்றிய விரிவான அலசல்…

இது தொடர்பாக புதிய தலைமுறை நடத்திய சிறப்பு நேர்காணலில் பேசிய கல்வியாளர் ராமசுப்ரமணியன் “ 10 இலட்சம் பேருக்கு 150 பொறியாளர்கள் இருக்கலாம். அதுதான் சீரானது என்று 2003ஆம் ஆண்டும் யூஆர் ராவ் கமிட்டி தெரிவித்தது. ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிகளவில் பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது.  அரசின் விதிகளின்படி கல்லூரிகளை நடத்தும்போது செலவுகளும் அதிகமானது. அதனை பல கல்லூரிகளால் சமாளிக்க முடியவில்லை.

சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல முக்கியமான துறைகளே தற்போது மூடப்பட காரணம், கடந்த பல ஆண்டுகளாக கட்டுமானத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான். அதுபோல உற்பத்தி துறையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக மெக்கானிக்கல் படிப்புக்கும் வரவேற்பு இல்லை. மேலும் பல துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்துவதாலும் பொறியாளர்களின் தேவை குறைகிறது. தேவையைவிட பொறியாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால்தான் பொறியாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அதனால்தான் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது. எனவே பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் சூழல் உருவாகிறது. அதே நேரம் ஐஐடி, எம்ஐடி போன்ற சில கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ஸ், ரோபோடிக்ஸ் போன்ற சில துறைகளுக்கான வரவேற்பும் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலும் பல பொறியியல் கல்லூரிகள் பள்ளிகளாக, கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படுகின்றன” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com