கல்வி நிறுவனங்கள் என்பது உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல - குஷ்பு ட்வீட்
கல்வி நிறுவனங்கள் என்பது உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, இந்த விஷயத்தில் அரசியலில் ஈடுபடுவது அவமானம் என்று பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக குஷ்பு வெளியிட்டுள்ள ட்வீட்டில், "கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் சார்ந்தது. பள்ளியில் சீருடை அணிவதையே நான் நம்புகிறேன். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் என்பது உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காகவே. இந்த விஷயத்தில் அரசியலில் ஈடுபடுவது அவமானம்.
நம் பள்ளி நாட்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம். என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை நான் பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட அப்படி இல்லை. அப்போது யாரும் குறை கூறவும் இல்லை.
உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்? பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா?" என்று தெரிவித்துள்ளார்