கற்றலை எளிமையாக்கும் ‘ப்ளாக் போர்டு’ மென்பொருள்

கற்றலை எளிமையாக்கும் ‘ப்ளாக் போர்டு’ மென்பொருள்

கற்றலை எளிமையாக்கும் ‘ப்ளாக் போர்டு’ மென்பொருள்
Published on

கல்வி கற்றலையும், கற்பித்தலையும் எளிமையாக்கும் ‘ப்ளாக் போர்டு’ என்ற மென்பொருள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இதற்கான விழாவில் அமெரிக்காவின் ப்ளாக் போர்டு நிறுவன நிர்வாகிகள் தங்களின் மென்பொருள் குறித்து விளக்கினர். மாணவர்கள் எளிதில் கற்கவும், ஆசிரியர்களுக்கு கற்பித்தலிலும் இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்க என ப்ளாக் போர்டு நிறுவனத்தின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் கூறினார்.

பிளாக் போர்டு என்பது அமெரிக்க நாட்டை சார்ந்த ஓர் கல்வி மென்பொருள் நிறுவனம். இது 1997 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இது முக்கியமாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடி கல்வி கற்றுக் கொள்ளமுடியும். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 110 மில்லியன் மாணவர்கள் இந்த பிளாக் போர்ட் software மூலம் பயன் அடைந்து வருகின்றனர். இது முதல் முறையாக இந்தியாவில் செய்யப்படுகிறது. இந்த அறிமுக விழா சென்னையில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் பிளாக் போர்டு சார்ந்த அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பல முக்கிய நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

இதற்காக ஆசிரியர்களுக்கு தனியாக 3 வார காலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் அவர்களது பாடத்திட்டத்தை பதிவு செய்த பின் மாணவர்கள் பயன்படுத்தலாம். இந்த பிளாக் போர்டு மென்பொருள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே இருக்கும் இடைவெளி குறையும். மேலும் கற்பித்தல் முறை எளிமையாக்கப்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் எளிமையாக கற்க முடியும் என்று கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com