ஆன்லைன் வகுப்பு நெறிமுறை - முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

ஆன்லைன் வகுப்பு நெறிமுறை - முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை
ஆன்லைன் வகுப்பு நெறிமுறை - முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் பாலியல் தொல்லை தொடர்பாக சர்ச்சை எழுந்தபோது ஆன்லைன் வகுப்பிற்கென்று முறையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இதற்காக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் ரெக்கார்டு செய்யப்பட வேண்டும், ஆசிரியர்கள் எவ்வாறு உடையணிய வேண்டும், ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றுதான் வகுப்பெடுக்க வேண்டும் என்பதுபோன்ற பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டது.

தற்போது இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுடன், அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் +2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, குழுவில் யாரை இறுதி செய்யலாம் என்பது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com