பூமிக்குள் துளையிட்டால் இன்னொரு பகுதிக்கு செல்ல முடியுமா? முடியாதா? - அறிவியல் அதிசயங்கள்!

பூமிக்குள் துளையிட்டால் இன்னொரு பகுதிக்கு செல்ல முடியுமா? முடியாதா? - அறிவியல் அதிசயங்கள்!
பூமிக்குள் துளையிட்டால் இன்னொரு பகுதிக்கு செல்ல முடியுமா? முடியாதா? - அறிவியல் அதிசயங்கள்!

`இந்த ஆப்பிள் எப்படி கீழே விழுந்தது’ என்று ஐன்ஸ்டீனின் மூளைக்குள் உதித்த கேள்விக்கான விடைதான், புவி ஈர்ப்பு விசை பற்றி நமக்கு தெரியவந்ததன் தொடக்கப்புள்ளி. இப்படி மனித மூளையின் ஒவ்வொரு கேள்விக்கும், அறிவியலில் ஒரு விடைகிடைக்கும். தன்னைத்தானே கேள்விக்கேட்டுக்கொள்ளும், அடுத்தடுத்த நிலைக்கு நகர்த்தி செல்லும் மாயாஜால வித்தையை அறிவியல் எப்போதும் செய்யும். அப்படி ஒருவருக்குள் எழுந்த `பூமியை துளையிட்டால் என்ன ஆகும்? அதன் வழியே நம்மால் பூமியின் மற்றொரு பகுதிக்கு செல்ல முடியுமா? அது சாத்தியமா?’ என்ற கேள்விக்கு தற்போது விடைகிடைத்துள்ளது.

பூமியை துளையிடுவது இது சாத்தியமில்லை என முதலில் சொல்லப்பட்டாலும்கூட, சில வல்லுனர்கள் இதை செயல்படுத்தி பார்க்கும் முயற்சியில் இறங்கினார்கள். அவ்வாறு, பூமியில் இடப்பட்ட ஆழமான துளையான கோலா சூப்பர் டீப். இது, சுமார் 12.26 கிலோமீட்டர் தூரத்துக்கு (பூமியின் விட்டத்தில் 0.2% - 8,000 மைல்) துளையிடப்பட்டது. இதற்கே 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இடையிடையே பூமியின் வெப்பம் தாளாமல் துளையிடும் பணி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பூமியின் அமைப்பை பொறுத்தவரை, அதில் நேராகத் துளை இட வேண்டுமென்றால் 8,000 மைல்களுக்கு மேல் செல்லும்போது பாறை, உருகிய தீப்பிழம்புகள், 6,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, பூமியின் மேற்பரப்பை விட 30 கோடி மடங்கு அதிக அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். இவை அனைத்தையும்தான் தற்போது ஆய்வாளர்கள் எதிர்கொண்டுள்ளனர். இப்படி எதிர்கொள்கையில், பூமியை பற்றிய மற்றொரு விஷயத்தையும் நாம் அறியவேண்டியுள்ளது. அது, பூமியின் சுழற்சி. பூமியின் மேற்பரப்பு, ஒரு மணி நேரத்திற்கு 1,000 மைல்களுக்கு மேல் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. பூமிக்குள் ஆழமாகச் சென்றால், அங்கும் அந்த சுழற்சி இருந்துகொண்டே இருக்கும்.

ஒருவேளை இந்த துளையில் யாரேனும் தவறி விழுந்தால் (அ) தெரிந்தே இறங்கினால், நாம் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமான இறப்பு ஏற்படும். ருலேட் மேசையின் (roulette table) மேல் உள்ள பந்து சுழல்வது போல, இதன் உள்ளே விழுபவர்கள் ஒரு மைல் தூரத்திலேயே துளையின் சுவற்றில் இடி பட்டுக்கொண்டே இருப்பர். இது கோரியோலிஸ் விளைவு எனப்படுகிறது.

`எனில், பூமிக்குள் துளையிட்டு போனால், அவ்வளவுதானா? இறந்துவிடுவோமா?’ என்று நீங்கள் கேட்கலாம். அப்படி இல்லை. இதன் பின்னணியை அறிய, புவி ஈர்ப்பு விசை பற்றி நாம் அறிய வேண்டும். பூமியை துளைடுகையில் அதன் உள்ளே இருக்கும் ஈர்ப்பு விசை, மேற்பரப்பில் நமக்கு இருப்பது போல நொடிக்கு 9.8 மீட்டர் என்று இருக்காது. மாறாக, உள்ளே செல்லச் செல்ல ஈர்ப்பு விசை குறைந்துக்கொண்டே போகும். சரியாக பூமியின் மையத்தில், ஈர்ப்பு விசை முழுமையாக இருக்கவே இருக்காது.

ஆக பூமியின் உள்ளே ஒருவர் செல்லச் செல்ல, தலைக்கு மேலே உள்ள பூமியின் புவி ஈர்ப்பு ஒரு அளவிலும், காலுக்குக் கீழே உள்ள பூமியின் ஈர்ப்பு விசை ஒரு அளவிலும் இருக்கும் என்பதால், தலைக்கு மேலே உள்ள உள்ள பூமி நம்மைப் பூமியின் மையத்துக்கு எதிர்த்திசையில் நமது தலையை இழுக்கும்; காலுக்குக் கீழ் உள்ள பூமி, மையம் நோக்கி நமது கால்களை இழுக்கும். சூறாவளிகள் வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ காணப்படுவதற்கும் இதுதான் காரணம். ஆக, இந்த துளைக்கும் விழும்/செல்லும் மனிதர்கள், கிட்டத்தட்ட சூறாவளி எதிர்கொள்ளும் மாதிரியான புவி ஈர்ப்பை எதிர்கொள்வர்.

இவற்றையெல்லாம் அறிந்த காரணத்தால், துளைக்குள் பாதுகாப்பாக செல்ல என்ன செய்வது என்று ஆய்வாளர்கள் யோசித்தனர். அப்போதுதான் அவர்கள் மற்றொரு கோட்பாட்டை கையில் எடுத்தனர். அதன்படி பூமியின் துருவங்களுக்கு கோரியோலிஸ் விளைவு பொருந்தாது என்பதால், துருவங்கள் வழியாக மட்டும் துளையை இட்டால் மனித உயிர்களின் சேதாரம் தடுக்கப்படலாம் என்பதை அவர்கள் கணித்தனர். கிட்டத்தட்ட, உயர்ந்த கட்டடத்தின் மேலிருந்து விழுவதைப் போலத்தான் இது. ஒரே ஒரு வித்தியாசம், வினாடிக்கு 6 மைல் வேகத்தில் இதில் மனிதர்கள் விழுவர். ஒலியின் வேகத்தை விட, இது கிட்டத்தட்ட 2,800% அதிகம்.

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெனில், பூமியின் மையத்தை நெருங்கும்போது, அந்த இடத்திற்குத்தான் புவி ஈர்ப்பு விசை இருக்காதே தவிர, மற்ற எல்லா திசைகளிலும் ஈர்ப்பு விசை சமமாக இருக்கும். இதனால் அநத இடத்துக்கு செல்லும் நபர், எல்லா திசையில் இருந்தும், இழுக்கப்படுவார். இதனால் அந்நபரால், ஈர்ப்பு விசையையும் உணர முடியாது; உடல் எடையையும் உணர முடியாது.

`அட... இவ்வளவு சொல்கின்றீர்களே... பூமிக்குள் துளையிட்டால், பூமியின் இன்னொரு பகுதிக்கு சென்றுவிட முடியுமா முடியாதா? அதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க’ என்கின்றீர்களா? சொல்கிறோம்.

பூமியின் துருவத்தில் துளையிட்டு, பூமிக்குள் துளையிட்டு பாதுகாப்பாக செல்லும் நபர், 42 நிமிடங்கள் 12 நொடிகள் கழித்து பூமியில் இட்ட மைய்யத்தை அடைவார். ஆனால், அங்குள்ள புவிஈர்ப்பின் காரணமாக திரும்பவும் தொடங்கிய இடத்துக்கே திரும்பவும் அவர் திரும்ப இழுக்கப்படுவார். அதேநேரம், துளையை விட்டு சிறிதும் நகர முடியாமல் திணறுவர். ஆக, அவரால் அந்த துளையில் இருந்து, வெளியே வரவே முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com