விமானத்துறை சார்ந்த பொறியியல் படிப்பு:  மாணவிகளுக்கு டிஆர்டிஓ உதவித்தொகை!

விமானத்துறை சார்ந்த பொறியியல் படிப்பு:  மாணவிகளுக்கு டிஆர்டிஓ உதவித்தொகை!
விமானத்துறை சார்ந்த பொறியியல் படிப்பு:  மாணவிகளுக்கு டிஆர்டிஓ உதவித்தொகை!

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான டிஆர்டிஓ-வில் 2019 ஆண்டிற்கான விமானத்துறை சார்ந்த பொறியியல் படிப்பில் பயில உள்ள மாணவிகளுக்கான உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள குறிப்பிட்ட பொறியியல் மாணவிகளிடமிருந்து மட்டும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. இதில் இளங்கலை பட்டப்படிப்பில் 20 பேரும், முதுகலை பட்டப்படிப்பில் 10 பேரும் என மொத்தம் 30 பேருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.

முக்கிய தேதி: 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.09.2019

உதவித்தொகை மதிப்பு:
1. நான்கு வருட இளங்கலை பட்டப்படிப்பு (B.E / B.Tech / B.Sc (Engg)) - ரூ.1,20,000 (ஆண்டுடொன்றுக்கு) வழங்கப்படும்.

2. இரண்டு வருட முதுகலை பட்டப்படிப்பு (M.E / M.Tech / M.Sc (Engg)) - ரூ.1,86,000 (ஆண்டுடொன்றுக்கு) அல்லது ரூ.15,500 மாதந்தோறும் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
1. விண்ணப்பதாரர், 4-வருட இளங்கலை பட்டப்படிப்பில் (பி.இ / பி.டெக் / பி.எஸ்சி (இன்ஜினியரிங்)) முதல் வருடம் சேர்வதற்கான 2019-20-க்கான அட்மிஷன் பெற்று குறிப்பாக ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் / ஏரோனடிக்கல் இன்ஜினியரிங் / ஸ்பேஸ் இன்ஜினியரிங் / ராக்கெட்ரி/ ஏவியோனிக்ஸ் / ஏர்கிராப்ட் இன்ஜினியரிங் என்ற துறைகளை தேர்வு செய்தவர்களாக இருத்தல் வேண்டும். அத்துடன் கூடுதலாக ஜேஇஇ(மெயின்) தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும் அல்லது ஜேஇஇ(மெயின்) தேர்வில் தகுதி மதிப்பெண்களும் பெற்றிருப்பதும் அவசியம்.

2. விண்ணப்பதாரர், 2-வருட முதுகலை பட்டப்படிப்பில் (எம்.இ / எம்.டெக் / எம்.எஸ்சி (இன்ஜினியரிங்)) முதல் வருடம் சேர்வதற்கான 2019-20-க்கான அட்மிஷன் பெற்று குறிப்பாக ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் / ஏரோனடிக்கல் இன்ஜினியரிங் / ஸ்பேஸ் இன்ஜினியரிங் / ராக்கெட்ரி/ ஏவியோனிக்ஸ் / ஏர்கிராப்ட் இன்ஜினியரிங் என்ற துறைகளை தேர்வு செய்தவர்களாக இருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாது இளங்கலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களில் தேர்ச்சியும், அத்துடன் கூடுதலாக கேட் (GATE) தேர்வில் தகுதி மதிப்பெண்களும் பெற்றிருப்பதும் அவசியம்.

குறிப்பு:
1. ஜேஇஇ(மெயின்) தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்


விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில்,  https://rac.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

விண்ணப்பிக்க தேவையானவைகள்:
1. ஸ்கேன் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள்,
2. ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம்,
3. ஸ்கேன் செய்யப்பட்ட ஆதார் கார்டு
4. கல்லூரியில் சேர்ந்ததற்கான சான்று
5. கல்லூரிக் கட்டண விவரங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் முக்கியம்.

மேலும், கூடுதல் தகவல்களை பெற, https://www.drdo.gov.in/drdo/whatsnew/DRDO_Scholarship.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com