அரசு கல்லூரிகளில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புகள்: மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

அரசு கல்லூரிகளில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புகள்: மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு
அரசு கல்லூரிகளில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புகள்: மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளில் 2020 - 2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இங்கு கற்பிக்கப்படும் இளநிலை சட்டப்படிப்புகளில் சேர தகுதியும் விருப்பமும் கொண்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எல்எல்பி ஹானர்ஸ், எல்எல்பி மூன்று ஆண்டு படிப்புகளுக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை படித்திருக்கவேண்டும். பொதுப்பிரிவினர், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர்கள் இளநிலைப் படிப்புகளில் தேவைப்படும் மதிப்பெண் சதவிகிதம் இடஒதுக்கீடு விதிகளுக்கேற்ப வேறுபடும்.

பொதுப்பிரிவினருக்கு எல்எல்பி ஹானர்ஸ் படிப்புக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 1000. எல்எல்பி படிப்புக்கு ரூ. 500. பட்டியலினத்தவருக்கு (எல்எல்பி ஹானர்ஸ்) ரூ. 500. எல்எல்பி படிப்புக்கு ரூ. 250. இந்தப் படிப்புகளுக்கு செப்டம்பர் 30ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

எல்எல்எம் படிப்பில் சேர விரும்புவோர் பிஎல் அல்லது எல்எல்பி படித்தவராக இருக்கவேண்டும். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 1000. பட்டியலினம் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ரூ. 500. இந்தப் படிப்புக்கு அக்டோபர் 7 ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் பேமெண்ட் கேட்வே மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் அல்லது அஞ்சல் வழியாக பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: சேர்மன், சட்டப்படிப்பு சேர்க்கை 2020 -2021, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், பூம்பொழில், 5, டாக்டர் டிஜிஎஸ் தினகரன் சாலை, சென்னை 28. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி (எல்எல்பி ஹானர்ஸ், எல்எல்பி ): 28.10.2020
விண்ணப்பிக்கக் கடைசி தேதி (எல்எல்எம்): 4.11.2020
விவரங்களுக்கு: www.tndalu.ac.in

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com