\
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி: விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு.!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி: விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு.!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி: விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு.!
Published on: 

தமிழகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு தகுதியும் அனுபவமும் கொண்ட பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின்கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில், 16 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கான தொகுப்பு ஊதியமாக ரூ. 33,250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி


சமூகப் பணி, சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை வளர்ச்சி உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்று, அவற்றில் ஐந்து ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். நாற்பது வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.

கோப்புப் படம் 

விண்ணப்பிக்கும் முறை


இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அலுவலக முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: ஆணையர் அல்லது செயலர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை - 10

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 9.10.2020

விவரங்களுக்கு: www.tn.gov.in

044 26421358

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com