\
தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை:  கால அவகாசம் நீட்டிப்பு

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு
Published on

நாடு முழுவதும் தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

2020-21 ஆம் கல்வி ஆண்டில் செப்டம்பர் - அக்டோபர் பருவத்துக்கான திறந்த நிலை, இணைய வழி மற்றும் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அக்டோபர் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்விமுறையில் புதிய பட்டப் படிப்புகளைத் தொடங்க கடந்த ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அனுமதி கோரியிருந்தது. அதில் 16 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com