தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
Published on

தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் வகுப்புகளுக்கு வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு என்பதை பெரிய விளம்பர பலகைகளில் வைக்காவிட்டால் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திற்காக 112 புதிய அரசு பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதல் 36 பேருந்துகள் ஏற்கனவே மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வரும் நிலையில் கோபி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுவதற்காக 11 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் பேருந்துளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியர் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் நீட் பயிற்சி அளிப்பது தெரிய வந்தால் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும் என்றார். தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் அரசுப்  பள்ளிகளில் தனியார் பள்ளிகளில் இருப்பது போல மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கழிவறைகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிளுடன் கூடிய வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்றார். தனியார் பள்ளிகளில் கட்டண விபரம் வெளிப்படையாக தெரிய வேண்டும் என்பதற்காக விளம்பர பலகைகளில் கட்டண விபரம்
 தெரவிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில் அவ்வாறு  கட்டண விவரத்தை தெரியப்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கருப்பணன், மாவட்ட ஆட்சியர் பிரபாகர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com