`RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை தொடக்கம்’- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

`RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை தொடக்கம்’- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்
`RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை தொடக்கம்’- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

RTE சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதற்கு வரும் 20 முதல் மே 18-ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில், `குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12 (1) (C) இதன்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும். குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பார்வையில் உள்ள அரசாணைகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கபட்டன’ என்று கூறப்பட்டுள்ளது.

அந்த வழிகாட்டுதலில், `வரும் 2022 - 2023-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் RTE (Right To Education) சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை பற்றி பெற்றோர் அறியும் வகையில், தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும்’ உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com