தமிழ்நாடு: பள்ளிகளில் இன்று முதல் மீண்டும் நேரடி வகுப்புகள்

தமிழ்நாடு: பள்ளிகளில் இன்று முதல் மீண்டும் நேரடி வகுப்புகள்
தமிழ்நாடு: பள்ளிகளில் இன்று முதல் மீண்டும் நேரடி வகுப்புகள்

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்கப்பட்டது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு, ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டன.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், இன்று முதல் ஒன்று முதல் 12 ஆம் வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. காலை முதல் மாலை வரை மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதேபோல, அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று வகுப்புகள் தொடங்குகின்றன. எனினும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பருவத் தேர்வுகள் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் அச்சமின்றி பள்ளிக்கு வரவேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com