அரசுப் பணியில் நேரடி நியமனம்: வயது உச்சவரம்பு உயர்வு

அரசுப் பணியில் நேரடி நியமனம்: வயது உச்சவரம்பு உயர்வு
அரசுப் பணியில் நேரடி நியமனம்: வயது உச்சவரம்பு உயர்வு

தமிழக அரசின் நேரடிப் பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் ஸ்வர்ணா அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசில் குறிப்பிட்ட சில பணிகளுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்தப் பணிகளில் சேர விரும்புவோருக்கு குறைந்தபட்சம் பொது கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்புக்கு மேல் கூடுதலான கல்வித்தகுதி இருக்கக்கூடாது. மேலும், பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோருக்கு வயது உச்சவரம்பு முப்பதாக நிர்ணயிக்கப்பட்டிருந்து. அது தற்போது 32 ஆக திருத்தி ஆணையிடப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு வயதுவரம்பு நிர்ணயம்

கடந்த 1990 ஆம் ஆண்டு வரை அரசுப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்கு குறிப்பிட்ட வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வயதுவரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக நாற்பது வயதுக்கு மேல் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களாகவும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், மாவட்டக் கல்வி அலுவலர்களாகவும் பதவி உயர்வு பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com