\
ஆகஸ்ட் 16 முதல் 27 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள்

ஆகஸ்ட் 16 முதல் 27 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள்

ஆகஸ்ட் 16 முதல் 27 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள்
Published on: 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அரசு ஊழியர்களுக்காக நடத்தப்படும் துறைத் தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துறைத் தேர்வுகள் மே மாதம் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தேர்வுகளுக்கான விரிவான அட்டவணை TNPSC இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் பதவி உயர்வு பெறவும், ஊதிய உயர்வு பெறவும் ஒவ்வோர் ஆண்டும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் துறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com