நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு

நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு
நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு

தமிழகத்தில் நீட் தேர்வு அமலுக்குப் பின் மருத்துவப் படிப்புகளில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை தமிழ்வழியில் படித்த 1,205 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்து மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக ஆர்வலர் அப்பாவு ரத்தினம் எழுப்பிய கேள்விக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் பதிலளித்துள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

அதாவது, 2015 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்து 510 பேரும் , 2016 ஆம் ஆண்டில் 537 பேரும் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட பின்னர், 2017 ஆம் ஆண்டு 52 பேரும், 2018 ஆம் ஆண்டில் 106 பேரும் தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை மருத்துவப்படிப்புகளில் சேர்ந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com