சிஆர்பிஎஃப்-ல் 1,412 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க தயாரா ?

சிஆர்பிஎஃப்-ல் 1,412 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க தயாரா ?
சிஆர்பிஎஃப்-ல் 1,412 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க தயாரா ?

சிஆர்பிஎஃப் மத்திய ரிசர்வ் காவல்படையில் காலியாக உள்ள தலைமைக் காவல் அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை ‘CRPF Recruitment 2020 ’ வெளியாகி உள்ளது.

இந்திய பாதுகாப்பு படையில் ஒரு பிரிவாக சிஆர்பிஎஃப் உள்ளது. இதில் தற்போது தலைமைக் காவல் அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக சிஆர்பிஎஃப்-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https:crpf.gov.in-ல் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 1412 காலிப்பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தேர்வு அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. ஆண்கள் பிரிவில் 1331 பணியிடங்களும், பெண்கள் பிரிவில் 81 பணியிடங்களும் உள்ளன.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் crpf.gov.in என்ற இணைதளத்திற்கு சென்று அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் நாள் : பிப்ரவரி 7, 2020

விண்ணப்பிக்க கடைசி நாள் : மார்ச் 6, 2020

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : ஏப்ரல் 19, 2020

பணியிடம் : டெல்லி

சிஆர்பிஎப் பணிக்கு ஆன்லைனில் விண்ணபிக்கும் முறை:

படி 1 : crpf.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

படி 2 : Home page-ல் உள்ள 'Recruitments' மெனுவை க்ளிக் செய்யவும்.

படி 3 : 'Recruitments' மெனுவில் உள்ள Head Constable Recruitment என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

படி 4 : Official Notification என்ற ஆப்ஷனில் உள்ள தகவல்களை படித்து பார்க்க வேண்டும்.

படி 5 : Apply என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

படி 6 : விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர் Submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

படி 7 : விண்ணப்பித்த படிவத்தை பதவிறக்கம் அல்லது ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com